The Pass

The Pass (2016)

தலைப்புThe Pass
மொழிEnglish
வெளியான வருடம்2016
வகைFeature film
எங்கு பார்க்கலாம்?YouTube
இலவசமாக பார்க்கலாமா?ஆம்
நடிகர்கள்Russel Tovey (Jason), Arinzé Kene (Ade), Lyndsey (Lisa McGrillis), Nico Mirallegro (Bellboy)
இயக்குனர்Ben A. Williams
கதைச்சுருக்கம்

The Pass – தங்களை லட்சோப லட்சம் மக்கள் ஆராதிக்கிறார்கள் என்று தெரியும் போது அந்த தனிமனிதர்களுக்கு – நடிகர்/விளையாட்டு வீரர்/அரசியல்வாதி தங்களது public image-ஐ காப்பாற்றவேண்டும் என்பதே கூடுதல் அழுத்தம் தான். பொதுவெளியில் என்ன அணியவேண்டும், என்ன வார்த்தைகள் பேசவேண்டும், யாரோடு associate செய்யவேண்டும், whom to be seen with என்று ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்து பார்த்து செதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்களுக்கு தங்களுடைய sexual orientation ‘வித்தியாசமாக’ இருந்தால் அதை பொதுவெளியில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதை வெளிக்காட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்கள் மீது எவ்வளவு pressure போடும்? அப்படிப்பட்ட அழுத்தத்தில் வசிக்கும் ஒரு பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரனின் கதை தான் இந்த “The Pass”.

இது முதலில் London’s Royal Court Theatre-ல் மேடை நாடகமாக அரங்கேற்றமாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற பிறகு திரைப்படமாக எடுக்கப்பட்டதாம். அது படத்தின் காட்சிகளில் எதிரொலிக்கிறது. படத்தில் மொத்தமே மூன்று காட்சிகளும், இரண்டு துணை பாத்திரங்களையும் சேர்த்து நான்கு நடிகர்கள் மட்டுமே. ஒவ்வொரு காட்சியும் ஒரே அறையில் அரைமணி நேரம் பிடிக்கிறது. ஆனால் நமக்கு இரண்டு முகங்களை மட்டும் அரைமணி நேரம் தொடர்ந்து பார்ப்பதால் எந்த அலுப்போ இல்லை அயற்சியோ தெரியாத அளவுக்கு கதையும், நடிகர்களும் நம்மை கட்டிப்போடுகிறார்கள். சொல்லப்போனால் சில நொடிகளில் எல்லாம் நாமும் அந்த இடத்தில் அவர்களோடு இருப்பது போல ஒன்றிவிடுகிறோம்.

காட்சி ஒன்று:-

The Pass (2016)
விடிந்தால் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் முக்கியமான கால்பந்து மேட்ச்… இந்த காட்சி முழுவதும் வெறும் ஜட்டியில், வெளியூரில் ஹோட்டல் அறையில் 19 வயது ஜேசனும் (Russel Tovey), ஏடேயும் (Arinze Kene) அந்த பதற்றத்தை தனிக்கவும், மனதை relax பண்ணவும் தங்கள் சக teammate-ன் homemade sex tape-ஐ பார்க்கலாமா, கையடிக்கலாமா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாளைய match-ல் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று தெரிந்தாலும் இருவரும் எந்த வித பொறாமையோ பகைமையோ காட்டாமல் ஒருவரை ஒருவர் நட்பாக கேலி செய்து விளையாடுகிறார்கள். வெள்ளையனான ஜேசன் நைஜீரியாவை சேர்ந்த கறுப்பின ஏடேவின் தந்தையை பற்றி கேலி செய்வதை ஏடேவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் சண்டை போடாமல் ஜாலியாக விளையாடுகிறான்.

The Pass (2016)
ஜேசன் இன்னும் ஒரு படி மேலே போய் ஏடேவின் தங்கை மீதான attraction-ஐயும் வெளிப்படுத்துகிறான். முகத்தில் Nutella-வை பூசிக்கொண்டு அவன் ஏடேவின் step brother என்று விளையாடுகிறான். பதிலுக்கு ஏடே முகத்தில் வெள்ளை paint-ஐ பூசிக்கொண்டு ஜேசனை கேலி பண்ணும் போது இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் விழுந்து செல்ல சண்டை போடுகிறார்கள். அப்போது ஏடேவுக்கு விரைப்பு தன்மை / டெம்பர் அடித்துவிட, ஏடே கூச்சத்துடன் ஒதுங்குகிறான். ஏடேவின் temper-ஐ பார்க்கும் ஜேசன் இது சகஜம் தான் என்று ஏடேவை சமாதானப்படுத்துகிறான். இந்த நெருக்கமான கணத்தில் ஏடேவும் ஜேசனும் கட்டிப்பிடித்து மென்மையாக ஆரம்பித்து வெறித்தனமாக கிஸ்ஸடிக்கிறார்கள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

காட்சி இரண்டு:-

The Pass (2016)
ஐந்து வருடங்கள் கழித்து ஜேசன் ஒரு ஹோட்டல் அறையில் பெண்ணுடன் ‘ஒதுங்குகிறான்’. இருவரும் flirt பண்ண ஆரம்பிக்கிறார்கள். ஜேசன் எப்படி தான் ஒரே match-ல் star player ஆனேன் என்று தம்பட்டம் அடிக்கிறான். அவர்கள் பேசுவதில் இருந்து அந்த பெண் ஒரு lap dancer என்றும், ஜேசன் அவளை date-க்கு அழைத்து வந்திருப்பதாக தெரிகிறது. பேச்சில் மெல்ல மெல்ல sex கலக்க, ஜேசன் அவளை கிஸ்ஸடித்து படுக்கையில் வீழ்த்த தயாராகிறான். அப்போது Hotel room boy வந்துவிட, அந்த பெண் அசௌகரியமாக கிளம்புகிறாள். ஆனால் ஜேசன் அவளது கைப்பையை பிடுங்கிக்கொண்டு அவளை போகக்கூடாது என்று மிரட்ட, முதலில் எதிர்க்கும் அவள் ஜேசன் அவள் கைப்பையில் இருந்து Spy Camera-வை எடுக்க, அவள் பயந்துவிடுகிறாள். ஜேசனிடம் தான் தவறு செய்துவிட்டதாகவும், தன்னை போக விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள்.

The Pass (2016)
ஜேசன் அவளிடம் அவளை இந்த Sting Operation-க்கு ஏற்பாடு செய்ததே தான் தான் என்றும், அவனே இந்த sex tape-ஐ leak செய்து தன் குழந்தைகளுடன் சேர முயற்சிப்பதாக சொல்கிறான். ஏனென்றால் அவனிடம் இருந்து பிரிந்து போன மனைவி ஜேசன் ஒரு gay என்ற அடிப்படையில் விவாகரத்து கேட்க இருப்பதால் அவன் குழந்தைகளை சந்திக்க அவள் அனுமதிக்கவில்லை. இந்த விவாகரத்து வழக்கில் தன் மனைவி expose செய்ய இருக்கும் தன்னுடைய gay image-ஐ முறியடிக்க அவனே இந்த sting operation மூலம் தான் ஒரு straight மற்றும் sex addict என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக சொல்கிறான். இறுதியில் அவள் பேசியதை விட இரண்டு மடங்கு பணம் கொடுத்து sex tape-ஐ உருவாக்குகிறான்.

காட்சி மூன்று:-

The Pass (2016)
இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து, அதாவது முதல் காட்சியில் இருந்து பத்து வருடங்கள் ஓடியிருக்கிறது. ஹோட்டல் அறையில் ஜேசன் யாருக்காகவோ காத்திருக்கிறான். கதவை திறந்தால் ஏடே வருகிறான். உரையாடலில் இருந்து ஜேசனுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவனது வீட்டில் தனிமை தாங்க முடியாமல் ஹோட்டலில் வந்து தங்கியிருப்பதாக தெரிகிறது. ஏடே விளையாட்டு துறையில் இருந்து ஒதுங்கி Plumber ஆக வேலை பார்ப்பதாகவும், அவன் கேரி என்ற Gay partner உடன் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது.

ஜேசன் பத்து வருடங்களுக்கு பிறகு தன்னை அழைத்ததன் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், பழைய நண்பனை பார்க்க ஆர்வத்துடன் வருகிறான். ஆனால் ஜேசன் அவனை சாதிக்காதவன், ஏழை, faggot என்று கேலி செய்து கடுப்படிக்கிறான். அது பத்தாது என்று தன் விசிறியாக இருக்கும் hotel bellboy கூட சேர்ந்து ஏடேவை மேலும் வெறியேற்றுகிறான். ஜேசனின் தீவிர விசிறியான Bellboy ஜேசனுடைய Sex video-வை தன் girlfriend உடன் சேர்ந்து பார்த்துக்கொண்டே கஜகஜா செய்ததாக சொல்கிறான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

The Pass (2016)
மனம் நொந்து போய் ஏடே வெளியேற தயாராக, ஜேசன் bellboy-ஐ விரட்டி, அறைக்கதவை தாழிட்டுவிட்டு ஏடேவை தன் வீட்டில் வந்து வசிக்குமாறு அழைக்கிறான். இதை எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ச்சி அடையும் ஏடே தான் பத்து வருடங்களுக்கு முன்பு மேட்சுக்கு முந்தின இரவில் ஜேசன் தன்னை கிஸ்ஸடித்த நொடியில் இருந்து ஜேசன் மீது காதல் கொண்டதாக confess செய்கிறான். அடுத்த நாள் match-ல் ஜேசன் வேண்டுமென்றே பந்தை ‘pass’ பண்ணாமல் தானே goal அடித்து Star of the match பெயரை தட்டிச்சென்றதை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவனுக்காக சந்தோஷப்பட்டதாக கூறுகிறான்.

ஆனால் ஜேசன் வெற்றியின் போதையில் ஏடேவை ஏறெடுத்து கூட பார்க்காமல் தவிர்த்துவிட்டதால், ஏடே வலியுடன் ஊரை விட்டு மட்டுமல்லாது விளையாட்டு துறையில் இருந்தே ஒதுங்கிவிட்டதாக குமுறுகிறான். இவ்வளவு நேரம் தன்னை ஒரு flamboyant character ஆக காட்டிக்கொண்டிருந்த ஜேசன் அந்த தனி அறைக்குள் தன் வீம்பு, vanity, வெளியுலகத்துக்கு காண்பிக்கும் macho male பிம்பத்தை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு கண்ணில் நீர் தேங்க ஏடனிடம் “எனக்கு Closet-ல தனியா இருக்க கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் என்னோடு வந்துவிடு” என்று கெஞ்சுகிறான். கன்னங்களில் கண்ணீர் வழிய vulnerable நிலையில் emotionally naked ஆக நிற்கும் ஜேசன் மீது ஏடனுக்கு பரிதாபம் வருகிறது. ஆனால் ஏடே தனக்கு கேரியே போதும் என்று ஜேசனை நிராகரித்துவிட்டு போய்விடுகிறான்.

The Pass (2016)
ஏடே போன பிறகு ஜேசன் அந்த இரவில் நடந்தது என்ன என்று மீண்டும் நினைவு கூர்கிறான். உண்மையில் ஏடேவின் மீது ஜேசன் தான் காதலுடன் படர்ந்திருக்கிறான். ஆனால் போட்டி என்று வரும்போது தன் காதலை பின்னுக்கு தள்ளிவிட்டு ஏடேவின் முதுகில் ஏறி வெற்றியை பறித்திருக்கிறான். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவும், அதன் காரணமாக கிடைத்த புகழை தன் homosexual orientation பாதித்துவிடக்கூடாது என்று Closet-க்குள் ஒளிந்துக்கொள்கிறான். கடைசியில் closet-க்குள் தனிமையில் புழுங்கி துணைக்கு ஏங்கி அழுவதாக முடிகிறது.

The Pass (2016)
இது முழுக்க முழுக்க ஜேசனாக நடிக்கும் Russel Tovey-யின் படம் தான். மனுஷன் 19 வயது மாணவனாக, 24 வயதில் பிரபலத்தின் புகழை தக்க வைத்துக்கொள்ள போராடும் இளைஞனாக, 29 வயதில் தனிமையில் வாடும் closet gay-வாக கலக்கி இருக்கிறார். நான் அசந்து போய் Russel Tovey-ஐ பற்றி மேலும் தேட, நிஜ வாழ்க்கையில் Russel Tovey ஒரு வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்தது. அதனால் தனக்கு வருவதெல்லாம் Gay வேடங்கள் என்பதால் அதிலேயே தன் career-ஐ உருவாக்கிக்கொண்டதாக Russel Tovey சொல்லியதை படிக்க நேர்ந்தது.

The Pass (2016)
Russel Tovey அளவுக்கு scope கிடைக்காவிட்டாலும் ஏடே-வாக வரும் Arinze Kene கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார். Russel Tovey-ஐ போலவே Arianze Kene-ம் வயதுக்கேற்ப தன் உடம்பை மாற்றிய physical transformation-ல் நம்மை ஈர்க்கிறார். அதிலும் ஜேசன் தன் காதலை மிதித்து அதன் மேலே வெற்றியை அடைந்ததை சொல்லும் போது அரின்ஸேவின் முகபாவங்கள் அவர் உள்ளுக்குள்ளே நிஜமான வலியுடன் பேசுவது போல இருந்தது. சமுதாயத்துக்காகவும், புகழுக்காகவும் தங்கள் பாலீர்ப்பை மறைத்து வாழும் gay-க்கள் மனதளவில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது இந்த “The Pass”. Sex காட்சிகளை எதிர்பார்த்து பார்க்க உட்கார்ந்தீர்கள் என்றால் நிச்சயம் ஏமாற்றம் தான்.

இணைக்கப்பட்டுள்ள YouTube video-வில் “Settings” –> “CC” –> “English (Auto Generated)”-ஐ தேர்ந்தெடுக்கவும்.


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Alternate Blogger URL:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2 Votes 1

Your page rank:

Picture of the day
The Pass (2016)
முன்னோட்டம்
YouTube video

முழு நீள வீடியோ
YouTube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top