| முன் கதை சுருக்கம்... |
|---|
| அர்ணாப் என் தந்தையை பார்க்க என் வீட்டுக்கு வருகிறான். இங்கே நான் அவனை என் முன்னாள் காதலனான விஷ்வாவை அறிமுகம் செய்து வைக்க, இருவரும் நன்றாக bond ஆகிறார்கள். நான் என்னை கைவிட்ட விஷ்வாவை பழிவாங்குவதாக வேண்டுமென்றே அவன் கண் முன்னாலேயே அர்ணாபை பாலியல் ரீதியாக சீண்டுகிறேன். அர்ணாப் அதை தடுத்ததால் அதை carry forward செய்து, எங்கள் வீட்டில் உடலுறவு கொள்ள முயற்சிக்க, என் அப்பா அதை பார்த்துவிடுகிறார். கையும் களவுமாக மாட்டிய குற்ற உணர்ச்சியில் நிற்க, என் அப்பாவின் verbal assault-ல் இருந்து காப்பாற்றிக்கொள்ள நான் களத்தில் குதிக்கிறேன். |
Airport parking-ல் அர்ணாப் என் கையை பிடித்துக்கொண்டு “பயப்படாதே கார்த்தி! இப்படி பிரச்சனையே இல்லாம நமக்கு acceptance கிடைச்சிடுச்சுன்னா நாளைக்கு நம்ம குழந்தைங்க கிட்டே சொல்றதுக்கு சுவாரசியமான கதை இருக்காது. எவ்வளவு வருஷமானாலும் நான் உனக்காக காத்திருப்பேன்… அப்பாவோட கோபம் குறையுற வரைக்கும் அவர் முன்னாடி என் கிட்டே phone-ல பேசாதே… நம்மளோட உறவு வார்த்தைகளால தான் வாழனும்ங்குற நிலைமையை தாண்டி அடுத்த stage-க்கு போயிடுச்சு” என்று என் விரல்களை எடுத்து முத்தமிட்டபோது வார்த்தைகள் வராத அளவுக்கு துக்கம் என் தொண்டையை அடைத்தது. வெளியே எனக்கு தைரியம் சொன்னாலும் உள்ளுக்குள்ளே அவனும் உடைந்து போயிருப்பதை கஷ்டப்பட்டு மறைக்க முயற்சிக்கும் அர்ணாப் எனக்குள் பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்தான். வீட்டுக்கு வந்ததும் கேட்ட என் அப்பாவின் ஏச்சும் பேச்சை எழுதி ஜாலியாக கதை படிக்க வந்த உங்களை கடுப்படிக்க வேண்டாமென்று அவற்றை எழுதாமல் தவிர்க்கிறேன். வார இறுதி முடிந்ததும் நான் அலுவலகத்துக்கு கிளம்பினேன். அப்பா “வழக்கமா வீட்டுல இருந்து தானே வேலை செய்வே? திடீர்னு ஆஃபீஸுக்கு எதுக்கு போறே?” என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் நான் ஷூ மாட்டினேன். என் மௌனம் அப்பாவை கடுப்பேற்றியிருக்கும் போல… “ஆஃபீஸுக்கு தான் போறியா இல்லை அந்த தேவடியாப் பையன் கூட ஏதாவது லாட்ஜ் ரூம்ல கும்மாளம் போடப்போறியா?” என்று கேட்க நான் அவரை சுட்டெரிப்பது போல பார்த்துவிட்டு என் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு படியிறங்கினேன். அப்பா மீதான கோபத்தை வண்டியின் கிக்கரில் உதைத்து காட்டி அதை கதறலுடன் சாலையில் ஓடவிட்டேன்.
வீட்டின் இறுக்கத்தை விட பாதி காலியான அலுவலகத்தின் அமைதி கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. அலைபேசியில் அர்ணாப்பின் குரல் கேட்ட சமயத்தில் எல்லாம் என் மனசுக்கு மருந்து போட்டது போல இதமாக இருந்தது. என் நிலையை அர்ணாப் நன்றாக புரிந்துக்கொண்டிருந்ததால் முடிந்த வரைக்கும் அவன் உரையாடலை light-ஆக கொண்டுபோனான். மாலை வீட்டுக்கு வந்தபோது வாசலில் கூடுதல் செருப்புகள் கண்டு தயக்கத்தோடு living room-க்குள் நுழைந்தேன். காவி சால்வை, காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்த இரண்டு பேர் என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்த பார்வையில் “இவன் தானா?” என்ற தொனி இருந்தது.
ஒரு வயதான சாமியார் “பயப்படாதீங்க சார்! நேரமும் சகவாசமும் சரியில்லைன்னா இப்படி தான் ஆகும். அதை நிவர்த்தி பண்ண தானே நாங்க எல்லாம் இருக்கோம்… ஒரு மண்டலம் பூஜை பண்ணினா எல்லாம் சரியாயிடும்… பையனை நம்ம ஆசிரமத்துல முழுசா வச்சிருக்கனும்… உங்களை தவிர யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டோம்…” என்று சொன்னபோது எனக்கு கொஞ்சம் திகீரென்று இருந்தது. என் அப்பாவுக்கும் ஏதோ யோசனை வந்தது போல… நெற்றியை சுருக்கியபடி தரையை பார்த்தார்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
ஒரு காவி வேட்டி “கவலை படாதீங்க! சிகிச்சை அப்போ நீங்க அந்த session-ல இருக்கலாம்” என்றதும் என் அப்பா ஆறுதல் அடைந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அர்ணாபின் அப்பா படிக்காதவர். அவர் தன் மகன் Gay என்று தெரிந்து அவனை குடும்பத்தோடு சேர்க்காமல் ஒதுக்கி விட்டார். அவனை இப்படி corrective therapy-க்கு ஆளாக்கவில்லை. ஆனால் மெத்த படித்து உயர்ந்த வேலையில் இருந்த என் அப்பா தன் மகனின் sexual orientation-ஐ இந்த Therapy-கள் மூலம் மாற்ற முடியும் என்று எங்கள் இருவரையும் துன்பத்துக்கு ஆளாக்க துணிந்துவிட்டார். ஒருவகையில் Ignorance is a bliss என்பது இது தானோ?
To cut the long story short… என் அப்பாவின் emotional blackmail-க்காக இல்லை என்றாலும், எனது காதலை எந்த பூஜை சமாச்சாரத்தாலும் மாற்றமுடியாது என்பதை நிரூபிப்பதற்காக நான் அந்த “மண்டல பூஜை”க்கு ஒத்துக்கொண்டு Loss of pay-ல் leave போட்டேன். திரும்பி சென்ற மூன்றாவது நாள் நான் எதிர்பாராத விதமாக அர்ணாப் என் அலுவலகத்து வாசலில் வந்து நின்றதும், எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் முகத்தில் கோபம், குழப்பம், அன்பு, அனுதாபம் என எல்லா உணர்ச்சிகளும் வந்து போயின.அர்ணாப் “பிரணயி! இந்த Conversion therapy எல்லாம் உன்னால தாங்க முடியாது… எனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கு. நீ எதுவும் யோசிக்காம, பேசாம என் கூட கொல்கத்தாவுக்கு வந்துடு… அப்பாவோட கோபம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் தணிஞ்சிடும். Meanwhile we’ll think of alternatives” என்ற போது நான் அவன் விரல்களை எடுத்து முத்தமிட்டேன். “இல்லை அர்ணாப் பாபு… அப்பாவுக்கு என் love-வோட intensity-ஐ நிரூபிக்க எனக்கு இந்த therapy-யை தோற்கடிச்சு காட்டனும்… அவ்ளோ தான்” என்று நான் சொன்னதற்கு “உன் love இல்லை.. நம்ம love..” என்று என் தலையில் செல்லமாக தட்டினான். நான் சிகிச்சைக்கு செல்லவேண்டிய அந்த நாளும் வந்தது. என் அப்பா என் mobile phone-ஐ தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.
நாங்கள் நகரத்தை தாண்டி பெரிய மதில் சுவர்கள் கொண்ட அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது எனக்கு திக் திக்கென்று இருந்தது. புலனாய்வு செய்யும் investigative journalist சமூகவிரோதி குகைக்குள் செல்வது போல இருந்தது. பார்க்க சாதாரண ஆசிரமம் போல இருந்தாலும், அந்த பக்த தன்னார்வலர்கள் ஒரு மார்க்கமாக இருந்தார்கள். முரட்டுத்தனமாக குண்டர்கள் போல இருந்த அவர்களை பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனாலும் இவை வேலைக்கு ஆகாது என்பதை என் தந்தைக்கு நிரூபிக்கவும், என் காதலின் உறுதியை சோதிக்கவும் தான் நான் இந்த சோதனை முயற்சிக்கு என்னை ஆட்படுத்திக்கொள்கிறேன். ஒரு நீண்ட அறைக்குள் என்னை போல இன்னும் சில ஆண்களையும் பெண்களையும் அழைத்துச்சென்றார்கள்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
ஓரளவுக்கு சுயநினைவில் இருக்கும்போது எங்களை சொற்பொழிவுக்கு அழைத்து இந்த ஓரினச்சேர்க்கை சமுதாயத்துக்கு எதிரானது என்பதால் “மாறாவிட்டால்” சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுவோம் என்று பயமுறுத்தப்பட்டோம். நான் “போதையில்” இருக்கும் போது என் காதுக்கு அருகில் “இந்த ஹோமோ நாய்ங்களை எல்லாம் தூக்குல போடனும்… நடுத்தெருவுல ஓடவிட்டு நாயை சுடுற மாதிரி சுட்டு தள்ளனும்” என்கிற ரீதியில் மணிக்கணக்காக “அர்ச்சனைகள்” speaker-ன் மூலம் ஓடவிட்டு மனசில் தன்பாலீர்ப்பை பற்றி அருவெறுப்பான எண்ணங்களை ஏற்படுத்த முயற்சி நடந்தது. அது போதாதென்று இந்த மாதிரி இயற்கைக்கு மாறாக இருப்பதால் LGBTQ-க்கள் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள், அவர்கள் மறைந்தால் தான் உலகம் “சுத்தமாகும்” என்பதால் அவர்கள் தற்கொலை செய்து இறந்தால் தியாக செம்மலாக சொர்க்கத்துக்கு போவார்கள் என்று மறைமுகமாக தற்கொலைக்கு தூண்டப்பட்டோம்.



