| தலைப்பு | In from the Side | ||||||||
| மொழி | English | ||||||||
| வெளியான வருடம் | 2022 | ||||||||
| வகை | Feature film | ||||||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||
| நடிகர்கள் | Alexander Lincoln, Alexander King, William Hearle | ||||||||
| இயக்குனர் | Matt Carter | ||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||
| First things first… எனக்கு இந்த 2021-ல் வெளிவந்த British Romantic Drama-வான “In from the side” பிடித்துப்போனதற்கான காரணம் இது வழக்கமான LGBTQ+ படங்கள் போல closet-க்குள் புழுங்குவது, gay-ஆக coming out செய்ய திண்றுவது மாதிரி depressing characters இல்லாமல் தன்பாலீர்ப்பாளர்களை normalise செய்யும் விதமாக அமைந்தது தான். மேலும் சராசரியாக gay-க்கள் எல்லாம் எப்போதும் சோகமாக, தனிமை விரும்பிகளாக இருப்பார்கள் என்ற பிம்பங்களை உடைத்து, உற்சாகமான கதாபாத்திரங்கள் மூலம் ஓரினச்சேர்க்கையை கொண்டாடும் படம் இது. அதற்காக இது எந்த conflict-ம் இல்லாத feelgood படமும் அல்ல. இதிலும் காதல், குழப்பம், மோதல், ஊடல் எல்லாம் உண்டு. பல LGBTQ+ திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றது என்பதில் ஆச்சரியம் இல்லை. கண்ணுக்கு அழகான கதாநாயகர்கள், வண்ணமயமான லண்டன் நகரம், கார்டிஃப்பின் மைதானம் என்று பார்க்கவும் ஜில்லென்று mainstream commercial படம் போல இருக்கிறது. படம் மழையில் நடக்கும் பரபரப்பான Rugby match-ல் செம்ம மாஸாக ஆரம்பிக்கிறது. லண்டன் நகரத்தில் இருக்கும் LGBT Rugby Club-களில் Team A-ல் இருக்கும் வாரன்னுக்கும், Team B-ல் புதிதாக சேர்ந்திருக்கும் அனுபவமில்லாத மார்க்குக்கும் ஒரு விளையாட்டு பந்தயம் முடிந்து நடக்கும் பார்ட்டியில் பார்த்த உடனேயே ஈர்ப்பு ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறையில் வைத்து கிஸ்ஸடிக்கிறார்கள் பின்னர் மார்க்கின் வீட்டு படுக்கை அறையில் சுடச்சுட உடலுறவும் நடக்கிறது. ஆனால் இரண்டு பேரும் வெவ்வேறு partner-களுடன் உறவில் இருக்கிறார்கள். மார்க்குடைய துணைவன் ரிச்சார்டு வேலை விஷயமாக நிறைய பயணம் செய்வதால் அவர்களுடையது ஒரு long distance உறவாக இருக்கிறது. வாரன் தன்னை இந்த Team A-ல் இணைத்துவிட்ட தனது காதலன் ஜான் தன்னை dominate செய்தாலும் நன்றிக்கடனுக்காக அவனுடன் இருக்கிறான். இப்படிப்பட்ட இரு கதாநாயகர்களுக்கு நடுவே காமத்தை தாண்டி காதல் பூக்கிறது. விளையாட்டு பயணங்களில் யாரும் கவனிக்காதபடிக்கு விரல்கள் கோர்த்து தங்கள் காதலை வளர்க்கின்றனர். காலமும் அவர்களை நிறைய நேரம் ஒன்றாக இருக்கும்படி சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கிறது. கடைசி நேரத்தில் ரிச்சார்டு வெளியூருக்கு போகவேண்டி இருந்ததால் மார்க் வாரனை கிறிஸ்துமஸ்ஸுக்கு தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பத்துக்கு அறிமுகம் செய்கிறான். அதுபோல வாரனும் மார்க்குடன் நிறைய நேரம் செலவழிக்கவேண்டும் என்று ஒரு மிக முக்கியமான rugby match-க்காக வாரனின் Team B-ல் guest player-ஆக சேர்கிறான். Cardiff-ல் நடக்கும் அந்த match-க்காக மார்க்கும் வாரனும் team members-களை தவிர்த்துவிட்டு தனியாக பயணம் செய்கிறார்கள். இப்படியாக மிக சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் அவர்கள் காதல் கதை எப்படியாக முடிந்தது என்பது தான் இந்த மீதிப்படமும்.
<--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 21/03/2025
|
|||||||||
| முன்னோட்டம் | |||||||||
![]() |
|||||||||
| விமர்சனம் | |||||||||
![]() |
|||||||||
| முழு நீள வீடியோ | |||||||||
| பகுதி 2 | |||||||||
| பகுதி 3 | |||||||||
<--- முற்றும் --->
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 21/03/2025
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |





