| தலைப்பு | From Beginning to End (Do Começo ao Fim) | ||||||||||
| மொழி | Portuguese | ||||||||||
| வெளியான வருடம் | 2009 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | Theatrical Release | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||||
| நடிகர்கள் | Rafael Cardoso; João Gabriel Vasconcellos; Júlia Lemmertz; Fábio Assunção | ||||||||||
| இயக்குனர் | Aluizio Abranches | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
எழுதப்பட்ட புராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இருந்த நெருக்கம், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த ஈர்ப்பு என்று இலைமறை காயாக ஓரினக்காதலின் இருப்பை பதிவு செய்திருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஓரினக்காதலையோ இல்லை ஓரினச்சேர்க்கையையோ இந்த சமூகம் இன்னும் முழுசாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓரினக்காதல் கதையில் incest-ம் சேர்ந்துக்கொண்டால்? இவை இரண்டும் இணைந்த திரைப்படம் கழுவி கழுவி ஊற்றப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் இருவரும் ஓரினக்காதலர்களாக மாறும் இந்த பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட போர்ச்சுகீஸ் மொழிப்படம் எந்த ஒரு straight காதல் கதைக்கும் சளைத்தது இல்லை என்று தோன்றும்.
தாமஸ் இல்லாமல் பிரான்சிஸ்கோ தனிமையில் போராடுகிறான். பிரான்ஸிஸ்கோ கிளப்பில் சந்தித்த ஒரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும், அவனால் தாமஸை தவிர வேறொருவருக்கும் தன்னை கொடுக்க முடியாது என்று உணர்கிறான். அங்கே ரஷ்யாவில் வசிக்கும் தாமஸும் பிரான்ஸிஸ்கோவின் பிரிவில் அவன் தான் தன் உயிர் என்று கண்டுக்கொள்கிறான். இருவரும் videocam வாயிலாக virtual sex-ன் மூலம் தங்கள் விரகத்திற்கு வடிகால தேட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் உடல்ரீதியான பிரிவு தாங்க முடியாமல் பிரான்சிஸ்கோ ரஷ்யாவிற்கு செல்கிறான். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகிறார்கள். இது போன்ற படங்களின் பிரச்சனை என்னவென்றால் (சமுதாயத்தால் வரையறுக்கப்படாத) உறவுகளை அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக காட்டும் விதத்தில் நாம் சொக்கிப்போய்விடுவோம். நம்மையும் மீறி அவர்களை ஆதரிக்க தொடங்குவோம். அதுவே நம்மை சுற்றி நடக்கும்போது நமது எதிர்வினை வேறாக இருக்கும். இந்த படத்திலும் அதுவே தான் நிகழ்கிறது. படம் visually aesthetic-ஆக நம்மை ஈர்க்கிறது. Lead characters இருவரும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்கள் (athlete மற்றும் swimmer) என்பதால் கட்டுடம்பில் கவர்ச்சியாகவும், வெறும் speedo மற்றும் bulge தெரியும் உடைகளில், இது தவிர முழுநிர்வாணம் மற்றும் கேமிராவுக்கு முன்பு உடலுறவில் மிக இயல்பாக இருக்கிறார்கள். நடிகர்கள் என்பதை மீறி உண்மையான காதலர்களை அவர்களுடைய வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் நாம் எட்டிப்பார்ப்பது போல natural-ஆக இருக்கிறார்கள். கதை நடக்கும் இடமும் கண்ணை கவர்வதாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கு பிரேசில் மற்றும் பிரேசில் ஆண்கள் மீது ஒரு weakness இருக்கிறது. இந்த கதைக்களமும், கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க பிரேசில் நாட்டில் இருப்பதால் என்னையும் அறியாமல் நான் அவர்கள் மீது பாரபட்சமாக ஈர்க்கப்பட்டுள்ளேன்.
இந்த படத்தை தேடி நீங்கள் அலைய வேண்டாம் என்பதால் படத்தின் முழுநீள வீடியோவை கீழே பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 26/02/2023
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| முழு நீள வீடியோ | |||||||||||
| பகுதி 2 | |||||||||||
| பகுதி 3 | |||||||||||
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 26/02/2023
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |




