| தலைப்பு | Cotracorriente | ||||||||||
| மொழி | Spanish | ||||||||||
| வெளியான வருடம் | 2009 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | YouTube | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||||
| நடிகர்கள் | Cristian Mercado (Miguel), Manolo Cardona (Santiago), Tatiana Astengo (Mariela) | ||||||||||
| இயக்குனர் | Javier Fuentes-Leon | ||||||||||
| Download Link | இங்கே சொடுக்கவும் | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| Contracorriente (Eng. title: Undertow) – எப்போதாவது ஏதாவது காதல் கதையை பார்த்து கண் கலங்கி இருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ‘பேய்’ காதல் கதையை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண் கலங்கவில்லை என்றாலும் நெஞ்சில் பாரத்தை உணர்வீர்கள். நான் அந்த Spanish மொழியில் எடுக்கப்பட்ட ‘Peru’ நாட்டு படத்தை, எந்த வித இடையூறும் இல்லாமல் – Mobile / laptop-ஐ தொடாமல், தொந்தரவு செய்யப்படாத தனிமையில், பார்த்தபோது கடைசி காட்சியில் என் கண்ணில் ஈரத்தை உணர்ந்தேன். காதலை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. ஒரு கட்டத்தில் நான் subtitle-ஐ கூட படிக்க தோன்றாத அளவுக்கு இந்த காதல் கதையில் ஊன்றிவிட்டேன். நிச்சயம் பாருங்கள். இப்படி ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தின் கதை என்ன? – ஒரு மீனவ கிராமத்தில் வசிக்கும் Miguel என்னும் மீனவன் நிறைமாத கர்ப்பினியான அவன் மனைவி Mariela, மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அதே ஊருக்கு வந்து வசிக்கும் வெளியூர் ஓவியனான Santiago-வை பற்றி ஊர் மக்களுக்கு பெரிய நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் Miguel-க்கும் Santiago-வுக்கும் இடையே யாருக்கும் தெரியாத காதல் உறவாடிக்கொண்டிருக்கிறது. அந்த மீனவர் குல வழக்கப்படி யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடலை முறையாக ஜலசமாதி செய்யவேண்டும். இல்லை என்றால் அவர்களது ஆவி இந்த உலகத்திலேயே அமைதியின்றி சுற்றிகொண்டிருக்கும் என்பது நம்பிக்கை. படம் ஆரம்பிப்பதே Miguel தன் நண்பனின் உறவினர் Carlos-ஐ நடுக்கடலில் அடக்கம் செய்யும் காட்சியில் தான். Miguel-ம் Santiago-வும் கடற்கரையில் சந்திக்கும் ஒரு மதியவேளையில் சிறு பிணக்கு ஏற்பட்டு Miguel வீட்டுக்கு வந்துவிட, எதிர்பாராமல் Santiago அலையில் அடித்து செல்லப்பட்டு இறக்கிறான். கடைசியில் Santiago பார்த்தது பேசியது Miguel என்பதால் அவனது ஆவி Miguel-ன் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது. ஆவியான Santiago Miguel-லிடம் தன்னை முறையாக அடக்கம் செய்து தனக்கு விடுதலை கொடுக்குமாறு கேட்கிறான். முதலில் அதை நம்பாத Miguel, சில பரிசோதனைகளுக்கு பிறகு ‘ஆவி’ Santiago தன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறான் என்று உறுதி செய்துக்கொள்கிறான். Miguel தங்கள் குல சம்பிரதாயப்படி ஜலசமாதி செய்து வைக்கும்வரை Santiago-வின் ஆவி தன்னை விட்டு போகாது என்பதால், உயிருடன் இருந்த Santiago உடன் வாழ கொடுத்து வைக்கவில்லை, அதனால் Santiago-வின் ஆவியுடனாவது நினைத்த வாழ்க்கையை வாழலாமே என்ற பேராசையில் Santiago-வின் உடலை கடலுக்கு அடியில் கல்லில் கட்டி வைத்துவிடுகிறான். அதற்கு Santiago-வின் ஆவியும் தான் உயிரோடு இருந்தபோது இருவரும் ஒன்றாக வாழ முடியாத வெளிப்படையான வாழ்க்கையை ஆவியாகவேனும் வாழ்ந்துக்கொள்ளலாம் என்று சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறது.
ஊர் மக்கள் அனைவரும் வெறுப்பாக வேடிக்கை பார்க்க, Santiago-ன் உடம்பை தன்னந்தனியாக தோளில் சுமந்து செல்கிறான். அதை பார்த்து மனம் இளகும் Miguel-ன் நண்பர்கள் அவனுக்கு தோள் கொடுக்க, ஊர் மக்களின் அனுமதியை எதிர்பார்க்காமல் வந்து Santiago-ன் பூத உடலை தூக்குகிறார்கள். பின்னர் ஊர் மக்களின் எதிர்ப்பு மெல்ல மெல்ல தளர்ந்து Santiago-வின் உடல் கடலலையை அடையும்போது அது ஊர்மக்கள் பங்குபெற்ற ஊர்வலமாக மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஊர் மக்கள் மறைமுகமாக அவர்களது காதலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். கட்டுமரத்தில் இருந்து Miguel தன் காதலனின் உடம்பை கடலுக்குள் தள்ளும் போது Santiago-வின் ஆவி தோன்றுகிறது. கடைசி முறையாக Miguel-ஐ அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு இந்த உலகை விட்டு மறைந்துவிடுகிறது. படிக்கும் போது ஏதோ fairytale கதை போல தோன்றினாலும் நிச்சயம் serious ஆன gays-களுக்கு மனதை பிசையும் அளவுக்கு அழுத்தமான காதல் படத்தில் இழைந்தோடுகிறது. பெரிதாக exposure இல்லாத பிற்போக்கு மீனவ கிராமத்தில் வெள்ளந்தியான மக்கள். ஓரினக்காதல் என்பது ஏற்றுக்கொள்ளப்படாத எட்டாக்கனி. அப்படிப்பட்ட சூழலில் திருமணமான ஆண் ஒருவன் சக ஆணின் மீது காதல் கொள்வது என்பது எப்படிப்பட்ட அழுத்தமும், அதை மறைக்க முகமூடியும் தேவைப்படும் என்பதை melodrama இல்லாமல் எளிமையாக, அதே சமயம் அழுத்தமாகவும் கடந்து சென்றிருப்பது தான் முதல் சிறப்பு. அனைத்து Gays-களை போல Miguel-க்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வம்சவிருத்தி என்பதை தாண்டி உலகத்துக்கு தன் ஆண்மையை நிரூபிக்கும் அம்சமாக படுகிறது.
இந்த full length படம் YouTube-ல் முழுவதுமாக கிடைக்கிறது. CC-ஐ on செய்துவிட்டு “Auto Translated Subtitles”-ஐ தேர்ந்தெடுத்தால் நல்ல English-ல் subtitles கிடைக்கிறது. பார்த்து பரவசம் அடையவும். YouTube-ல் இருந்து download செய்வதற்கு Click Here குறிச்சொற்கள்: ஓரினக்காதல் <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/07/2024
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| விமர்சனம் | |||||||||||
![]() |
|||||||||||
| முழு நீள வீடியோ | |||||||||||
![]() |
|||||||||||
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/07/2024
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |






